உ.பி. மாநிலம் அயோத்தியில் தீபாவளியையொட்டி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார்.
உ.பி. மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட தீர்ப்பு வெளியாகி ஓராண்டு நிறைவடைந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி உ.பி மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயில் விழா கோலம் பூண்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று தீப உற்சவம் எனப்படும் தீபம் ஏற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது.
சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தீபம் ஏற்றப்பட்டது. இதில் முதல்வர் யோகி ஆதித்யாநாத் கலந்து கொண்டு தீபாராதனை செய்து வழிபட்டார். இந்த விழாவில் கவர்னர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். தீப உற்சவத்தையொட்டி அயோத்தி ராமர் கோயில் முழுவதும் தீப ஒளி வெள்ளத்தில் ஜொலித்தது.
Discussion about this post