Home Viveka-Vastu வரலாற்று நிகழ்வு: ராம் கோவிலில் பூமி பூஜை குறித்த வெங்கையா நாயுடு

வரலாற்று நிகழ்வு: ராம் கோவிலில் பூமி பூஜை குறித்த வெங்கையா நாயுடு

0

ராமர் கோவில் பூமி பூஜை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சி. அதனை நாம் காணப் போகிறோம் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
உ.பி., மாநிலம் அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் அனுமதியளித்தது. கோவில் கட்டுவதற்காக, ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை, மத்திய அரசு அமைத்தது. இந்நிலையில், அயோத்தியில், பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, 5ம் தேதி காலை நடக்கிறது. இதில், பிரதமர் மோடி பங்கேற்று, அடிக்கல் நாட்டுகிறார். இதற்காக அயோத்தி நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது.
இதுகுறித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு டுவிட்டரில் பதிவிட்டதாவது: ஓரிரு நாட்களில், அயோத்தியில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வைக் காணப்போகிறோம். ராமருக்காக ஒரு கோவிலைக் கட்டுவதால், நாம் பாக்கியம் அடைகிறோம். ராமர் கோவிலை மீண்டும் கட்டுவது, நம் கலாசாரத்தை கட்டி எழுப்புவது போன்றது. 2,000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட, காலங்களைத் தாண்டி நிற்கும் ராமாயணத்தை நினைவுகூர்வதாக அந்நிகழ்ச்சி இருக்கும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here