கந்த சஷ்டி கவசம் மற்றும் முருக கடவுள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் ‘கருப்பர் கூட்டம்’ என்ற யூடியூப் சேனலில், வீடியோ வெளியிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டித்து, இந்து அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையில் இன்று, இடையர்பாளையம் பாரதிய ஜனதா கட்சி சார்பில், மாநில இளைஞரணி செயலாளர் மருத்துவர் பிரீத்தி லட்சுமி இல்லம் முன், அந்த அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும், பெண்கள் தங்களது கைகளில் பல வண்ணங்களில் வேல் வரைந்தும், வேல் வடிவில் 50 கோலங்கள் இட்டும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். முருக கடவுளின் குறித்த பஜனை பாடல்கள் பாடியும், கருப்பர் கூட்டத்தை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.
கந்த சஷ்டி கவசம் மற்றும் முருக கடவுள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் ‘கருப்பர் கூட்டம்’ என்ற யூடியூப் சேனலில், வீடியோ வெளியிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டித்து, இந்து அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். pic.twitter.com/4j5dLbngbi
— AthibAn Tv (@AthibAntv) July 28, 2020
கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள மின் கம்பத்தில், மர்ம நபர்கள் 50 அடி உயரத்தில் வேல் வைத்து, சாலையில் வெற்றிவேல் வீரவேல் என்றும் எழுதியது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Facebook Comments Box