அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பூமி பூஜை நிகழ்ச்சிக்கு தடை கோரிய மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்காக, ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது. கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை வரும் ஆக.5ம் தேதியன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க, பிரதமர், மோடி உள்ளிட்ட வி.ஐ.பி.க்கள் பலருக்கு, ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில் டில்லியைச் சேர்ந்த ஒருவர் அலகாபாத் உயர்நீ்திமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். அதில் கொரோனா காலத்தில் அன்லாக் 2.0 என்ற பெயரில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது வழிகாட்டுவிதிமுறைகளை மீறியதாகும். எனவே பூமி பூஜை நடத்த தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கோவிந்த் மாத்தூர், தடை விதிக்க மறுத்து வழக்கை தள்ளுபடி செய்தார்.
Facebook Comments Box