தொடங்கியது பூரி ஜெகந்நாதர் கோவில் ...

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஆண்டுதோறும் நடத்தப்படும், ஒடிசாவின் புரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை மற்றும் அதனுடன் தொடர்புடைய விழாக்களுக்கு இந்த ஆண்டு அனுமதி கிடையாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

ஒடிசாவின் புரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை ஜூன் 23ம் தேதி நடைபெற இருந்தது. கொரோனா பரவல் காரணமாக, இந்த யாத்திரையை தள்ளி வைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த தலைதமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, ரத யாத்திரைக்கு நாங்கள் அனுமதி அளித்தால், கடவுள் ஜெகன்நாதரே எங்களை மன்னிக்க மாட்டார். தொற்று நோய் பரவல் சமயத்தில் இதுபோன்ற கூட்டங்கள் நடக்க அனுமதிக்க முடியாது. மோசமான தொற்றுநோயான கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்பதால், சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். நெரிசலான சூழலில் ஆபத்து பன்மடங்கு அதிகரிக்கும்.

இதன் காரணமாக பொது சுகாதாரம் மற்றும் குடிமக்களின் பாதிப்பிற்காக இந்த ஆண்டு ரத யாத்திரையை அனுமதிக்க முடியாது. 10 ஆயிரம் பேர் மட்டும் ரத யாத்திரையில் கலந்து கொண்டாலும், அதுவும் தீவிரமான விஷயம் என தெரிவித்தார்.

Facebook Comments Box