பஞ்சகவ்ய பெருமை

0
1
          பசுவும், பசுதரும் பஞ்சகவ்யமும்
தெய்வத்தன்மை கொண்டவை. என்றென்றும் புனிதமானவை.ஆகவே ஹிந்து சமயத்தில் இவை
வழிபாடுளில் ஒரு முக்கிய நிலைத்த இடத்தைப் பெற்று விளங்குகின்றன.
           பசுவிடமிருந்து கிடைக்கும் இந்த ஐந்து
பொருட்களே பஞ்சகவ்யம் எனப்படும். ஹிந்துக்களின் பல்வேறு சடங்குகள், பூஜைகளில்
இதந்கென தனி இடம் உண்டு. இந்த பஞ்சகவ்வியத்தில் பல்வேறு தேவர்கள் வாசம்
செய்கின்றனர். பசுவின் பால், தயிர், நெய், கோமயம், சாணம் என்னும் இவ்வைந்தும்
சேர்ந்தே பஞ்சகவ்யம்.
பஞ்சகவ்யம்
செய்ய சில அளவு வரைமுறைகள் உள்ளன.
1.   பசும்பால்    – 1 அளவு
2.   பசும்
தயிர்   – 2 அளவு
3.   பசும்
நெய்   – 3 அளவு
4.   கோசலம்    – 1 அளவு
5.   கோமலம்    – 1 அளவு
6.   தர்ப்பை
கலந்த நீர்     – 3 அளவு
    இவ்வாறு பஞ்சகவ்யத்தை கலக்கும் போது தக்க
மந்திரங்களை இடையறாது உச்சரிக்க வேண்டும். பசும்பால் தான் ஏற்றது. எருமைப்பால்
முதலியவற்றை பயன்படுத்தக் கூடாது.
    பசுக்களில் பல்வேறு நிறங்களைக் கொண்ட
பசுக்கள் உள்ளன. பசுக்களின் நிறத்திற்கும், அவை தரும் பாலின் தன்மைக்கும் இடையில்
தொடர்பு உண்டு.
   பொன்னிற பசுவிடமிருந்து பாலும், நீல நிறப்
பசுவிடமிருந்து தயிரும், கருநிறப் பசுவிடமிருந்து நெய்யும், செந்நிறப்
பசுவிடமிருந்து கோசலமும், தனித்தனியே எடுத்து பஞ்சகவ்யம் தயாரிக்க வேண்டும்.
சிவனுக்குரிய அபிஷேகப் பொருட்களில் பஞ்சகவ்யமே சிறந்தது.
  
       இவ்வாறு சிறந்த பஞ்சகவ்யத்தை தமிழில்
“ஆனைந்த
என்பர்.
   
       பசும்பாலின் சந்திரனும், பசுவின் தயிரில்
வாயு பகவானும், கோமயத்தில் வருண தேவனும், பசும் சாணத்தில் அக்னிதேவனும், நெய்யில்
சூரிய பகவானும் வாசம் செய்கின்றனர்.
      
       இது நோய் தீர்க்கும் மாமருந்தாகும், ஒரு
பலம் கோமூத்திரம் கட்டை விரலில் பாதி சாணம், ஏழு பலம் பால், இரண்டு பலம் தயிர்,
ஒரு பலம் தர்ப்ப ஜலம் ஆகியவை கலந்ததே பஞ்சகவ்யம் எனப்படும். இதனை “பிரம்ம
கூர்ச்சம்
என்பர்.
பசுவின்
உடலில் தேவர்களின் இருப்பிடம்
       பசுவின்
உடலில் பல்வேறு பாகங்களில் தேவர்கள் வாசஞ் செய்வதாக புராணங்கள் கூறுகின்றன.
1.   தலை  – சிவபெருமான்
2.   நெற்றி – சிவசக்தி
3.   வலது
கொம்பு    – கங்கை
4.   இடது
கொம்பு    – யமுனை
5.   கொம்பின்
நுனி   – காவிரி, கோதாவரி
     முதலிய புண்ணி நதிகள், சராசரி உயர்
வர்க்கங்கள் உரைகின்றன.
1.   கொம்பின்
அடியில்    – பிரம்மா
2.   மூக்கின்
நுனி           – முருகன்
3.   மூக்கின்
உள்ளே       – வித்யாதரர்கள்
4.   இருகாதுகளின்நடுவில்      – அசுவினி தேவர்
5.   இரு
கண்கள்                  – சூரியன்,
சந்திரன்
6.   வாய்                    – சர்ப்பசுரர்கள்
7.   பற்கள்                   – வாயுதேவன்
8.   நாக்கு                   – வருணதேவன்
9.   நெஞ்சு
மத்திய பாகம்  – கலைமகள்
10. கழுத்து                        – இந்திரன்
11. மணித்தலம்             – இயமனும்,
                                இயக்கங்களும்
12. உதடு                    – உதயாத்தமான
                             சந்தி
தேவதைகள்                     
13. முரிப்பு
(கொண்டை)         – பன்னிரு
                               ஆதித்யர்கள்
14. மார்பு                    – சாத்திய தேவர்கள்
15. வயிறு                   – பூமி தேவி
16. கால்கள்                       – அனிலன் எனும்
                               வாயு தேவன்
17. முழந்தாள்                    – மருத்து தேவர்
18. குளம்பு                        – தேவர்கள்
19. குளம்பின்
நுனி               – நாகர்கள்
20. குளம்பின்
நடுவில்           – கந்தர்வர்கள்
21. குளம்பின்
மேல் பகுதி – அரம்பையர்
22. முதுகு                   – உருத்திரர்
23. யோனி                        – சந்த மாதர்
24. குதம்                    – இலட்சுமி
25. முன்
கால்                    – பிரம்மா
26. பின்
கால்                     – உருத்திரன், தன்
                               பரிவரங்களுடன்
27. பால்
மடி                      – ஏழு
சமுத்திரங்கள்
28. சந்திகள்
தோறும்       – அஷ்டவசுக்கள்
29. அரைப்பரப்பில்               – பிதிர் தேவதை
30. வால்
முடி                    – ஆத்திகன்
31. உரோமம்                      – மகா முனிவர்கள்
32. எல்லா
அங்கங்கள்          – கற்புடைய
                               மங்கையர்
33. மூத்திரம்                      – ஆகாய கங்கை
34. சாணம்                        – யமுனை
35. சடதாக்கினி             – காருக பத்தியம்
36. இதயம்                        – ஆக வணியம்
37. முகம்                    – தட்சிரைக்கினியம்
38. எலும்பு,
சுக்கிலம்      – யாகத்தொழில்

                               முழுவதும்
Facebook Comments Box