சந்திர கிரகணத்தில் செய்ய வேண்டியவை – தவிர்க்க வேண்டியவை
2025 ஆம் ஆண்டு முழு சந்திர கிரகணம் வரும் செப்டம்பர் 7, ஞாயிற்றுக்கிழமை நிகழ உள்ளது. இந்த கிரகணத்தின் போது பின்பற்ற வேண்டிய நெறிகள், பரிகாரங்கள் என்னென்ன என்பதை ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் விளக்கமாக தெரிவித்துள்ளார்.
கிரகணம் ஏற்படும் விதம்
ஜோதிடக் கோட்பாட்டின்படி, சூரியன்–சந்திரன் ராகு அல்லது கேதுவின் பாகையில் சந்திக்கும் போது சூரிய கிரகணம், அதேபோல் சூரியன்–சந்திரன் நேர்கோட்டில் சென்று ராகு அல்லது கேதுவை தொடும் போது சந்திர கிரகணம் உருவாகிறது.
கிரகண நேரம் (07.09.2025 – ஞாயிற்றுக்கிழமை)
- கிரகணம் தொடக்கம் – இரவு 9.57
- உச்சம் – இரவு 11.43
- நிறைவு – செப். 8 அதிகாலை 1.00
(ஆவணி 22, சதயம் நட்சத்திரத்தில் நடைபெறும்.)
சாந்தி செய்ய வேண்டிய நட்சத்திரங்கள்
திருவாதிரை, சுவாதி, அவிட்டம், சதயம், பூரட்டாதி.
புராணக் குறிப்பு
சந்திரன் பாவங்களின் விளைவால் ராகு தோஷத்தால் பிடிக்கப்படுகிறார். அப்போது இறைவனை பிரார்த்தித்ததால் ராகுதோஷம் நீங்குகிறது. இதன் அடிப்படையில், கிரகண நேரத்தில் இறைவனை பக்தியுடன் துதித்தால் பாவநிவிர்த்தி ஏற்படும் என நம்பப்படுகிறது.
கிரகண காலத்தில் தவிர்க்க வேண்டியது
- கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாகவே உணவு சாப்பிடக்கூடாது.
- கர்ப்பிணிப் பெண்கள் வீடுக்கு வெளியே செல்லக்கூடாது.
- கோயில்கள் அந்த நேரத்தில் மூடப்பட்டிருக்கும்.
- சமைத்து வைத்திருக்கும் உணவின் மீது தர்ப்பை புல் வைத்து பாதுகாக்க வேண்டும்.
செய்ய வேண்டியது
- கிரகணத்தின் போது நவக்கிரக துதி மற்றும் சந்திர கிரகண துதி பாராயணம் செய்யலாம்.
- கிரகணம் முடிந்ததும் குளித்து ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும்.
- தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும்.
- பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்ல பலனை தரும்.
- ஆலய தரிசனம் முடித்த பிறகே உணவு உட்கொள்ள வேண்டும்.
- வீட்டிலேயே இருந்தபடியே இறைவனைப் பாடி, இறைபாடல்களை பாராயணம் செய்வது நல்ல பலனை அளிக்கும்.
முக்கிய குறிப்பு
இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும் என்பதால், கிரகண தோஷம் உள்ளவர்கள் கண்டிப்பாக சாந்தி–பரிகாரம் செய்ய வேண்டும்.