வீட்டில் உள்ள கஷ்டங்கள் தீர பெஸ்ட் வாஸ்து டிப்ஸ்! வெள்ளெருக்கன் கட்டையை நிலைவாசலில் எப்படி வைக்கலாம்

குடும்பமே கடன் தொல்லையில் சிக்கிவிட்டால், அதிலிருந்து மீண்டு வருவது பெரும் சிக்கலாகிவிடும். இதனால் குடும்ப உறுப்பினர்களிடம் மனநிம்மதி, ஒற்றுமை குலையும்.. குழப்பங்கள், சங்கடங்கள், சச்சரவுகள் மனஅழுத்தங்கள் அதிகமாகிவிடும்.. போதாக்குறைக்கு ஆரோக்கிய குறைபாடும் ஏற்பட்டுவிடும். இதுபோன்ற இன்னல்களை தவிர்க்கவே, ஆன்மீகத்தில் எளிய குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளன.. அந்தவகையில் வீடுகளில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்பது பற்றியும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. அதில் ஒருசிலவற்றை பார்ப்போம்.

பெண்கள் எப்போதுமே மங்களகரமாக காணப்பட வேண்டும். நெற்றியில் பொட்டு வைக்காமல் பூஜைகளை செய்யக்கூடாது. கைகளில் வளையல் அணியாமல், பிறருக்கு உணவு பரிமாறக் கூடாது.

வீட்டில் பெஸ்ட் வாஸ்து டிப்ஸ்

அதேபோல நம்முடைய வீட்டை எந்த அளவுக்கு சுத்தமாக வைத்திருக்கிறோமோ, அந்த அளவுக்கு மகாலட்சுமியின் அருள் கிட்டும் என்பார்கள்..

அந்தவகையில், வீட்டில் நிலைவாசலில் கவனம் செலுத்த வேண்டும். எப்போதுமே வீட்டு நிலைவாசல் சுத்தமாக இருக்க வேண்டும்.. வாசப்படியில் வேப்பிலை, மாவிலை என ஏதாவது ஒன்று கட்டி வைக்க வேண்டும். அப்படி கட்டி வைக்கும்போது, வாரத்துக்கு 2 முறையாவது இந்த இலைகளை மாற்றிவிட வேண்டும். எக்காரணம் கொண்டும் காய்ந்து போக விடக்கூடாது.

ஆனால், பிளாஸ்டிக் இலைகளை தோரணமாக கட்டக்கூடாது. நிலைவாசலில மட்டுமல்லாமல், பூஜையறையிலும் மா விளக்குகளை கொண்டு அலங்கரிக்கலாம்.. விநாயகர் சிலைக்கு மா இலைகளை செலுத்தி வரும்போது பணக்கஷ்டம் இருக்காது என்பார்கள்.

வெள்ளெருக்கன் கட்டை

அதேபோல, தலை வாசலில் சங்கு பதிக்கலாம்.. குறிப்பாக, ஐந்து வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்குரிய வசிய பூஜை செய்த வலம்புரி சங்கை, வாசற்படியில் பதிப்பதால், வளமான வாழ்க்கை அமையும்.. அதேபோல மரம் அல்லது மண்ணினால் செய்யப்பட்ட யானை பொம்மைகளை வைக்கலாம்.

அதேபோல, வெள்ளருக்கன் கட்டை, மஞ்சள் நீரில் கழுவி, அந்த கட்டையின் மேல், மஞ்சள், குங்குமம் பூசி, சிகப்பு கயிற்றினை கொண்டு, வாசற்படியில் கட்டி விட வேண்டும். அத்துடன், தினந்தோறும், இந்த கட்டைக்கும் ஊதுபத்தி காண்பித்து வந்தால், வீட்டிற்குள் எதிர்மறை எனர்ஜி நுழையாமல் தடுக்கப்படும்.

கிழிந்த துணிகள், அறுந்த செருப்பு

கிழிந்த துணிகள், மக்கிப்போன துணிகளை வீட்டிற்குள்கூட வைத்திருக்க கூடாது.. பழைய கடிகாரங்கள், ஓடாத கடிகாரங்கள், உடைந்த கண்ணாடிகள், அறுந்த செருப்புகள், பழைய காலண்டர்கள், தேய்ந்து போன துடைப்பங்கள் இப்படி எதுவானாலும் உடனே தூக்கி எறிய வேண்டும். இவைகள் அனைத்துமே வீட்டிற்கு எதிர்மறையான ஆற்றலை தந்து, அதன்மூலம் வறுமையை கொண்டுவந்துவிடும்.

வீட்டில் துடைப்பத்தை செங்குத்தாக வைக்கக்கூடாது.. குப்பையை மூலையில் சேகரித்து வைக்ககூடாது.. அழுக்கு துணிகளை இரவில் ஊறவைக்கக் கூடாது.. வீட்டில் கல் உப்பு, பருப்பு, அரிசி, ஊறுகாய்களை தீராமல் பார்த்து கொள்ள வேண்டும்..

நெல்லி மரம் நன்மை

அம்மிக்குழவி, உரல், குழவியை வீட்டின் தென்கிழக்கு திசையில் வைக்க வேண்டும். வீட்டிற்குள் வைப்பதைவிட வீட்டின் பின்புறத்தில் வைக்கலாம்.. வடகிழக்கு திசையில் மட்டும் அம்மிக்கல், ஆட்டுக்கல்லை வைக்கக்கூடாது.

வாரம் 2 முறையாவது, தண்ணீரில் கல் உப்பு, மஞ்சள், கற்பூரத்தை சேர்த்து கலக்கி வீட்டு மூலையில் தெளித்துவிட வேண்டும்… விஷ்ணுவின் அம்சமான நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்வதாக நம்பப்படுகிறது.. குபேரருக்கு உரிய மரமாகவும் உள்ளதால், நெல்லிமரத்தை வீட்டில் வளர்ப்பது நன்மை தரும்.

வீட்டில் உள்ள கஷ்டங்கள் தீர பெஸ்ட் வாஸ்து டிப்ஸ்! வெள்ளெருக்கன் கட்டையை நிலைவாசலில் எப்படி வைக்கலாம்

Facebook Comments Box