Home Viveka-Vastu சூரிய கிரகணம் ஆரம்பம் மற்றும் பரிகார விவரங்கள

சூரிய கிரகணம் ஆரம்பம் மற்றும் பரிகார விவரங்கள

0
சூரிய கிரகணம் ஆரம்பம் மற்றும் ...

வருகிற சார்வாரி ஆண்டு ஆனி மாதம் (07) 21.06.2020. ஞாயிற்றுக் கிழமை. காலை மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் சூரிய கிரகணம் ஆரம்பம். தமிழ்நாட்டில் நிலவும்.

காலை 10.22 to மதியம் 1.50 வரை உள்ளது.

பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரக் காரர்கள்:

1. மிருகசீரிடம்,

2. சித்திரை

3. அவிட்டம

4. திருவாதிரை

5. ரோஹிணி.

மேற்கண்ட நட்சத்திரக் காரர்கள் மற்றும் இதர நட்சத்திரக் காரர்கள் கிரகணம் ஆரம்பிக்கும் பொழுது என்ன செய்ய வேண்டும் ?

~~~~

1. வீட்டில் உள்ள பூஜை அறையில் விளக்கு ஏற்றி நமசிவாய என்கிற மந்திரத்தை கிரகணம் முடியும் வரையில் ஜபித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

2. தீட்சை பெற்றவர்கள் இந்த கிரஹணத்தின்  பொழுது அனுட்டான நியமனங்களை செய்ய வேண்டும்.

3. வீட்டில் இருக்கும் பயன்படுத்து கின்ற பொருட்களின் மீது தர்ப்பை புல்லை  போட வேண்டும்.

4. கர்ப்பிணி பெண்கள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியே வரக்கூடாது.

5. கிரகணம் ஆரம்பம் முதல் முடிவு வரை எதுவும் சாப்பிடக்கூடாது. தண்ணீர் கூட அருந்தாமல் இருப்பது உத்தமம்..

6. முடிந்தால் நாக பிரதிஷ்டை செய்து (பஞ்சலோகம்,  அல்லது ஏதாவது கல் சிலையில் இருந்தால் கூட பரவாயில்லை) அதற்கு அபிஷேகம் பூஜை செய்ய வேண்டும் என்று குறிக்கப்படுகிறது.

இதனால் ராகு , கேது தோஷம் நிவர்த்தியாகும்..

7. சிவ பூஜை செய்பவர்களும் இத்தருணத்தில் பூஜை செய்வது உத்தமம்.

சிவபூஜை செய்பவர்கள் அதிகாலையில் தாங்கள் சிவ பூஜை செய்திருப்பினும் கூட மறுபடியும் சூரிய கிரகணத்தின் பொழுது செய்ய வேண்டும் என்று நியமம்  உள்ளது.

8. அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பிராமணர்களை கொண்டு சாந்தி செய்து கொள்ள வேண்டும்..

9. கிரகணம் முடிந்த பிறகு தங்கள் இல்லத்தை கழுவி மீண்டும் சுவாமி படத்திற்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்யுமாறு வேண்டுகிறேன்.

10. கோயிலில் யாகங்கள் நடைபெற்றால் கலந்து கொண்டு இறையருள் பெறுமாறு வேண்டுகிறேன்..

~~~~

இத்தகவலை மற்றவர்களுக்கு அனுப்பி புண்ணியத்தை பெறுமாறு வேண்டுகிறேன

~~~~

தெரிந்தால் தெரியாதது போல் பேசுவான் அறிவாளி.

தெரிந்தாலும் தெரியா விட்டாலும் உளரிக் கொட்டுவான் முட்டாள்……..

~~~~

மரங்கள் காற்றைச் சுத்தம் செய்கின்றன

நம்பிக்கை மனசை சுத்தம்.     செய்கிறது……!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here