”திருமலை ஏழுமலையான் தரிசன டிக்கெட் ரத்து செய்த 90 சதவீதம் பேருக்கு கட்டணம் திருப்பி செலுத்தப்பட்டுள்ளது” என தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார்சிங்கால் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: திருமலை ஏழுமலையான் ஆர்ஜித சேவைகள் தரிசன டிக்கெட்கள் உள்ளிட்டவற்றை மார்ச் 14 முதல் மே 31 வரை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.’தரிசன டிக்கெட் ஆர்ஜித சேவைக்கு முன்பதிவு செய்தவர்கள் தங்களின் தரிசன விபரங்களை மின்னஞ்சல் செய்யலாம். அவர்களது வங்கி கணக்கில் பணம் திருப்பி செலுத்தப்படும்’ என தேவஸ்தானம் தெரிவித்திருந்தது.
இதன்படி 45 சதவீதம் பக்தர்கள் தங்கள் விபரங்களை அனுப்பினர். இதன்படி மின்னஞ்சல் அனுப்பிய 2.50 லட்சம் பக்தர்களில் 90 சதவீதம் பக்தர்களுக்கு அதாவது 1.93 லட்சம் பேருக்கு பணம் திருப்பி செலுத்தப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் விரைவில் தரிசன டிக்கெட்டிற்கான தொகை திருப்பி செலுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Discussion about this post